தரைப்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

தரைப்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-20 17:41 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணி முடியாத நிலையில் வாகனங்கள் அந்த வழியாக செல்லும்போது, புழுதி பறக்கிறது. இதனால் சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே தரைப்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்