மேம்பாலத்தை உயர்த்த வேண்டும்
உளுந்தூர்பேட்டை கெடிலம் மேம்பாலத்தை உயர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை கெடிலம் மேம்பாலம் மிகவும் தாழ்வாக உள்ளதால் பாலத்திற்கு கீழே கார், மோட்டார் சைக்கிள் மட்டுமே செல்ல முடிகிறது. கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் கனரக வாகன ஓட்டிகள் வெகுதூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் மேம்பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.