நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்கள்.... விரைந்து சென்று மீட்ட இந்திய கடற்படை

எஞ்சின் பழுதாகி இலங்கை அருகே சிக்கி தவித்த பூம்புகார் மீனவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பினர்.

Update: 2022-09-30 07:53 GMT

மயிலாடுதுறை,

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி, விசைப்படகில் 16 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகின் எஞ்சின் பழுதடைய, 7 மீனவர்கள் மட்டும் மீன்பிடி படகும் மூலம் கரை திரும்பி தகவல் அளித்தனர்.

இதனிடையே, பழுதடைந்த விசைபடகு காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் செல்ல, வந்து மீட்டு செல்லும் படி இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய கடற்ப​டை​ 9 மீனவர்கள் மற்றும் படகையும் பாதுகாப்பாக மீட்டு வந்தது. இதையடுத்து, சொந்த ஊர் திரும்பிய மீனவர்களை, கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்