மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம்:
வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடலில் அதிகப்படியான காற்று வீசுவதால் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.