கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

நாகையில், மீன்பிடித்துக்கொண்டிருந்த போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.

Update: 2023-05-14 18:45 GMT


நாகையில், மீன்பிடித்துக்கொண்டிருந்த போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.

மீனவர்

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 56). மீனவரான இவா் நேற்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றார்.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகில் இருந்து நிலைதடுமாறி செல்வமணி கடலில் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தநிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் கடலில் படகு மட்டும் தனியாக நிற்பதை கண்டு அருகில் சென்று பார்த்தனர்.

கடலில் பிணமாக...

அப்போது செல்வமணி கடலில் பிணமாக மிதந்தார். அவரது உடலை மீனவர்கள் மீட்டு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் அங்கு வந்த போலீசார், செல்வமணி உடலை ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த செல்வமணிக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சக மீனவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்