தடைகாலம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை: மீன் சந்தையில் குவிந்த அசைவ பிரியர்கள்..!
தடைக்காலத்தை விட தற்போது மீன்களின் விலையும் குறைந்துள்ளது.
சென்னை,
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததையடுத்து மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு, கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே குவிந்திருந்த மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். சங்கரா, மத்தி, கவலை, நவரை, வஞ்சிரம், பாறை உள்ளிட்ட மற்ற மீன்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.
தடைக்காலத்தை விட தற்போது மீன்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள கூட்டமாக காணப்பட்டது.