சென்னைக்கு வருகிறது ஓட்டுனர்கள் இன்றி இயங்கும் முதல் மெட்ரோ ரெயில்
ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது;
சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் இரண்டில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரெயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில் , சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆளில்லா முதல் மெட்ரோ ரெயில் 2024 - ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் . அதை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும்.