மாடு மாலை தாண்டும் விழா கோலாகலம்

குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா கோலாகலமாக நடந்தது.

Update: 2022-07-09 18:07 GMT

மாடு மாலை தாண்டும் விழா

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு சலக்கெருது மாடு மாலை தாண்டும் விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை மந்தையர்கள் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் முப்பனகட்சிமந்தாநாயக்கர், கருமாதம்பட்டி ஊர் நாயக்கர், அலங்காரிபட்டி ஊர் நாயக்கர், கோடங்கி நாயக்கனூர் கோடங்கி நாயக்கர் ஆகியோர் தலைமையில் மாடு மாலை தாண்டும் விழா நடத்தப்பட்டது.

200 மாடுகள் பங்கேற்பு

இதில் 14 மந்தையர்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இந்த மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் சேமங்கலம் பகுதி மாடு முதலில் வந்தது. இதில் கருமாதம்பட்டி, அலங்காரிப்பட்டி, கோடங்கிநாயக்கனூர், பெருமாள் கோவில் பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், முக்கியஸ்தர்கள் திரளாக பங்கேற்று மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளித்தலை போலீசார் செய்திருந்தனர். வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்