திருச்சுழி,
திருச்சுழி துணைமாலை அம்மன், திருமேனிநாதர் சுவாமி கோவில் பிட்டுத்திருவிழா திருச்சுழி குண்டாற்றில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சுவாமி மற்றும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.