உழவர் சந்தை அமைக்க வேண்டும்

திருக்கோவிலூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-03 17:08 GMT

திருக்கோவிலூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருக்கோவிலூர் நகர 7-வது மாநாடு நடந்தது. இதற்கு நகர செயலாளர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். துணை செயலாளர் அருண்குமார் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கே.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அஞ்சாமணி, கதிர்வேல், ஒன்றிய குழு உறுப்பினர் சிவக்குமார், என்.வேலு, இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் எஸ்.விஜய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருக்கோவிலூர் நகர புதிய செயலாளராக பி.எச். கிப்ஸ், துணை செயலாளராக அருண்குமார் பொருளாளராக ஆஜிம் மற்றும் 11 பேர் கொண்ட நகர குழு தேர்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், 10 ஆண்டாக வறண்டு கிடக்கும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தெப்பக்குளத்திற்கு பெரிய ஏரியில் இருந்து புதியதாக குழாய் அமைத்து தண்ணீரை நிரப்ப வேண்டும், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், சந்தப்பேட்டை மசூதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், திருக்கோவிலூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன. 

Tags:    

மேலும் செய்திகள்