தீக்காயம் அடைந்த முதியவர் சாவு

ஓட்டப்பிடாரம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் இறந்தார்.;

Update:2023-03-05 00:15 IST

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே சிலோன்காலனி பகுதிகளில் உள்ள தோட்டத்தில் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த பங்குராஜ் (வயது 65) என்பவர் வசித்து வந்தார். கடந்த 27-ந் தேதி இரவு வீட்டில் மண்எண்ணெய் விளக்கை பற்ற வைத்து அருகில் தூங்கினாராம். தூக்கத்தில் இருந்த அவர் கை பட்டதில் மண்எண்ணெய் விளக்கு சரிந்து அவரது ஆடையில் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்