தீக்காயம் அடைந்த முதியவர் சாவு

சாத்தான்குளம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-07-10 13:47 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 80). இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து 40 ஆண்டுகளாக தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பீடியை குடித்து விட்டு, அதில் இருந்த தீயை அணைக்காமல் வீட்டுக்குள் ேபாட்டு விட்டாராம். இந்த பீடியிலிருந்த தீ குடிசைக்குள் இருந்த கழிவு பஞ்சில் பட்டு தீப்பிடித்து, குடிசையிலும் பரவி எரிந்துள்ளது. இந்த தீயில் ராஜபாண்டி உடல் கருகியுள்ளார். அக்கம் பக்கத்தினர் குடிசை வீட்டில் எரிந்த தீயை அணைத்து பலத்த தீக்காயங்களுடன் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்