டிரைவரை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

தேங்காப்பட்டணம் அருகே டிரைவரை தாக்கி தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2023-07-24 18:45 GMT

புதுக்கடை:

தேங்காப்பட்டணம் அருகே டிரைவரை தாக்கி தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

தேங்காப்பட்டணம் அருகே உள்ள பனங்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் சுஜின் (வயது 23), டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சஜின் (26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று சுஜின் தனது வாகனத்தை அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜின் அவரை வழிமறித்து தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியையும் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சுஜின் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சஜின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்