சிகிச்சை பலனின்றி டிரைவர் சாவு
கார்-ஆட்டோ மோதி விபத்தில் சிகிச்சை பலனின்றி டிரைவர் இறந்தார்.;
கூடலூர்,
கூடலூர் தொரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த மாதம் 7-ந் தேதி கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை அழைத்துக் கொண்டு தொரப்பள்ளிக்கு ஆட்டோ ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊட்டியில் இருந்து மைசூரு நோக்கி சென்ற கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ராஜன் உள்பட சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். பின்னர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் ராஜன் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராஜன் இறந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.