நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்... நடவடிக்கை எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.;
சென்னை,
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரான சுப்பையா சண்முகம், அறுவை சிகிச்சை அறையில் ஒரு நர்சுடன் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மருத்துவர் காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் சுப்பையா மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருவதாகவும், இன்னும் ஒரு வார காலத்தில் அறிக்கை வந்தவுடன் மருத்துவர் சுப்பையா மீது சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.