"திமுக அரசு எந்த தவறும் செய்யவில்லை" - அமைச்சர் ஐ.பெரியசாமி

திமுக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.;

Update:2022-06-02 23:25 IST

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் பகுதியில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

அபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

எங்கள் அரசு நேர்மையாக உள்ளது. எந்த அமைச்சர்களும் தவறும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக தான் திமுக அரசு திகழ்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்காகவும், விளம்பரத்திற்காகவும் திமுக அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்.

எதாவது சொல்லவேண்டும் என்பதற்காக பாஜக அண்ணாமலை கூறி வருகிறார். அவர் பேசுவதில் எள் அளவும் உண்மையல்ல. அவர் போலீஸ்துறையை சேர்ந்தவர் என்பதால் அரசியல் பற்றி அவதூறாக பேசி வருகிறாரா, எந்த கட்சியுடன் இருந்தார் என்பது அவருக்கே தெரியும். யார் ஊழல் செய்தது என்பதும் அவருக்கே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்