உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

Update: 2023-06-28 18:45 GMT

மாநில நிதிக்குழு மானியம் மூலம் உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் பேசினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், நமச்சிவாயம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். உறுப்பினர்களும், வட்டார அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:-

பாரதிமோகன்: பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் முன்பாக உயர்மின் விளக்கு அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளதா? ஒவ்வொரு ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பகுதியிலும் வளர்ச்சிப்பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுமா?

முதல்-அமைச்சருக்கு பாராட்டு

தலைவர்: அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.50 லட்சத்தால் வடுவூர் கோதண்டராமர் கோவில், பறவைகள் சரணாலயம் போன்றவற்றை சுற்றுலா மையமாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் மூணாறு தலைப்பு பகுதியையும், கோவில்வெண்ணியில் உள்ள கரும்பேஸ்வரர் கோவில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அப்பகுதிகளை சுற்றுலா மையமாக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் காட்டூரில் கலைஞர் கோட்டம் அமைத்துத்தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். மாநில நிதிக்குழு மானியம் மூலம் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்