கிணற்றில் தவறி விழுந்து மான் குட்டி பலி

ஆம்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மான் குட்டி பலியானது.

Update: 2023-10-16 18:14 GMT

ஆம்பூர்

ஆம்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மான் குட்டி பலியானது.

ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கிணற்றில் மான் குட்டி ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, வாணியம்பாடி வனவர் வெங்கடேசன் தலைமையில், வனக்காப்பாளர்கள் நாகராஜ், அரவிந்தன், பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மான் குட்டி உடலை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்