மழையில் அடித்து செல்லப்பட்ட தடுப்பணை சீரமைக்கப்படும்

மழையில் அடித்து செல்லப்பட்ட தடுப்பணை சீரமைக்கப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.

Update: 2022-05-26 19:32 GMT

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஏழு மாதத்திற்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணையின் கரை, அருகில் இருந்த தார்சாலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழையின் காரணமாக சோளிங்கர் அருகே உள்ள கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட தளவாய்பட்டடை தடுப்பணையின் ஒருபுறம் மற்றும் தார்சை அடித்து செல்லப்பட்டது. அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தார்சாலையை தற்காலிகமாக சீர் செய்தனர். தடுப்பணை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தடுப்பணையை உடனே சீரமைக்க வேண்டும் என ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அதனடிப்படையில் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து தடுப்பணையை சீரமைத்து தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்