குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மீண்டும் இருவழிப்பாதையானது
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மீண்டும் இருவழிப்பாதையானது
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள். இதனால் சமவெளி பகுதியில் இருந்து ஊட்டி செல்லும் பிரதான சாலையான மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு மே மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏப்ரல் மாத கடைசி வாரமே இந்த சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.
தற்போது கோடை சீசன் முடிவுற்ற நிலையில் உள்ளது. இதையொட்டி 47 நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.