ரெயிலில் அடிபட்டு சமையல் மாஸ்டர் பலி

ரெயிலில் அடிபட்டு சமையல் மாஸ்டர் உயிரிழந்தார்.

Update: 2023-10-08 22:13 GMT

லால்குடி:

சமையல் மாஸ்டர்

லால்குடி அருகே உள்ள பூவாளூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 46). சமையல் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பூவாளூர் பின்னவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற செல்வம், அங்கு மது வாங்கி குடித்ததாகவும், பின்னர் அங்கிருந்து நடந்தே காட்டூர் நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது காட்டூர்-வெள்ளனூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக மூடப்பட்டிருந்தது. அங்கு சென்ற செல்வம் கேட்டை தாண்டிச்சென்று, தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். இதை பார்த்த கேட் கீப்பர் ரெயில் வருவதால் கேட்டை மூடியுள்ளோம் என்று கூறி, அவரை தடுத்துள்ளார். ஆனால் கேட் கீப்பர் சொல்வதை கேட்காமல், செல்வம் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, செல்வம் மீது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ெசல்வம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் விருத்தாசலம் ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்