மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார நடைபயணம் மேற்கொண்டனர்.
கோவில்பட்டி:
பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோவில்பட்டி தாமஸ் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் நடைபயண பிரசாரம் செய்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.
இதில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், துணைச் செயலாளர் ராமச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் ரஞ்சிதம், பொன்மணி, தாலுகா குழு உறுப்பினர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.