தூய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியை தனியார ்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-12 19:30 GMT

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியை தனியார ்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் முறையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசாணை எண் 62-ன் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம், பணிக்கொடை, சம்பள நிலுவை தொகைகளை வழங்க வேண்டும்.

தமிழக அரசு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியத்தை நேரடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்த சம்பளம் ரூ.5 ஆயிரத்தை ஏப்ரல் மாதம் முதல் அரியர் தொகையோடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் திருவாரூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 பேர் கைது

இதை முன்னிட்டு திருவாரூர் விளமல் பகுதியில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்றனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்