சரிந்து விழுந்த அய்யம்பேட்டை-கணபதி அக்ரகாரம் சாலையை சீரமைக்க வேண்டும்

சரிந்து விழுந்த அய்யம்பேட்டை-கணபதி அக்ரகாரம் சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-06-13 20:04 GMT

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தை மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட வட பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. புதிய பாலத்தின் கட்டுமான பணியின்போது பழைய பாலத்தின் சாலை கடந்த 11-ந்தேதி சரிந்தது. இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று முதல் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரும் வகையில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் நேற்று திறந்து விட்ட நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வட புறத்தில் உள்ள ஊர்களுக்கு பாபநாசம், திருவையாறு வழியே சுமார் 20 கி.மீ. தூரம் சுற்றி சென்று வருகின்றன. இதனால் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதோடு, அதிக எரிபொருளும் செலவாகிறது. எனவே இந்த சாலையை அனைத்து வாகனங்களும் சென்று வரும் வகையில் விரைவாக சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்