வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் அபேஸ்; வாட்ஸ்அப்புக்கு வந்த லிங்கை அழுத்தியதால் விபரீதம்

Update: 2022-07-02 04:27 GMT

கோப்புப்படம்

கோவை:

கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது.

அதில், இன்று இரவுக்குள் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மேலும் மின் கட்டணத்தை செலுத்த கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த நடராஜன், உடனடியாக அந்த லிங்கை கிளிக் செய்து, தனது வங்கி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார்.

பின்னர் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த கணக்கிற்கு ரூ.10 மட்டும் செலுத்தினார். இந்தநிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 7 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்