கரைபுரண்டு ஓடிய காவிரி... பார்வையிட வந்தவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் காவிரி ஆற்றின் பாலத்தின் மீது குவிந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.;

Update:2022-07-18 01:56 IST

நாமக்கல்,

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை கண்டு ரசிப்பதற்காக ஆற்றின் பாலத்தின் மீது குவிந்தனர்.

மேலும் குழந்தைகள் உள்பட குடும்பத்தினரோடு வந்த சிலர் ஆபத்தை உணராமல் அங்கு நின்று புகைப்படங்களை எடுத்தவாறு இருந்தனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால், அவர்களை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்