பெண்ணை திட்டியவர் மீது வழக்கு
பெண்ணை திட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்த பழனிவேலின் மனைவி பழனியம்மாள்(வயது 60). இவர் வெளியூர் சென்றுவிட்டு கடந்த 15-ந் தேதி தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் அருகில் இருந்த 3 முந்திரி மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டிருந்தன. இது குறித்து சின்னதுரை என்பவர் மீது புகார் தெரிவித்த நிலையில், அவர் தகாத வார்த்தைகளால் தன்னை திட்டியதாக, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பழனியம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.