கள்ளக்குறிச்சியில் மனைவியை கத்தியால் குத்திய டாக்டர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியில் மனைவியை கத்தியால் குத்திய டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-16 17:39 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் ரோட்டை சேர்ந்தவர் உத்திரகோபு (வயது 67). ஓய்வுபெற்ற கால்நடை டாக்டர் ஆவார். சம்பவத்தன்று இவருடைய முதல் மனைவி ரேணுகாதேவி (54) உத்திரகோபுவை சந்தித்து ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உத்திரகோபு, ரேணுகாதேவியை கத்தியால் கழுத்தில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த ரேணுகாதேவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் உத்திரகோபு மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்