பிடிபட்ட நாகப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது
பிடிபட்ட நாகப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.;
கூடலூர்,
கூடலூர் பகுதியில் பருவமழை காலம் முடிவடைந்து இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து சிறுவன உயிரினங்களான பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலின்பேரில் ஓவேலி வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று நாகப்பாம்பை பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டனர். பின்னர் கூடலூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.