தலைநகர் கொலைநகராக மாறி வருகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தலைநகர் கொலைநகராக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2022-05-24 12:45 IST

சென்னை,

திமுக ஆட்சியில் சென்னையில் தொடர்ந்து கொலை, கொள்ளை, அடாவடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் அதிமுக தரப்பில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.

காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறத" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்