திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சுடலைமுத்து (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பகலில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது திருச்செந்தூரில் கன்னியாகுமரி ரோட்டில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து விட்டு ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அந்த வழியாக வந்த அரசு பஸ் சுடலைமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.