சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.;
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 22). இவர், 17 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.