சிறுவன் கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் கைது

Update: 2022-08-03 21:30 GMT

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவத்தன்று நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 15 வயது சிறுவன் ஒருவன் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவன் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

Tags:    

மேலும் செய்திகள்