கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் இறந்தான்.;

Update:2023-07-09 00:15 IST

காரைக்குடி

பள்ளத்தூர் போலீஸ் சரகம் அழகாபுரி மேலக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு.பெயிண்டர் இவரது மகன் அழகுராஜா (வயது 14). இந்த நிலையில் நேற்று மதியம் அழகு ராஜா சலூன் சென்று முடி திருத்தம் செய்து கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தனது நண்பனோடு குளிக்க சென்றான். கிணற்றில் உள்ளே இறங்கி படியில் அமர்ந்து அழகுராஜா குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதில் நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்த தகவலறிந்த காரைக்குடி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் தேடினார்கள். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அழகுராஜா உடலை மீட்டனர்.

இது குறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்