சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்;

Update:2023-07-16 00:15 IST

திருத்துறைப்பூண்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது50). இவர் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டிலிருந்து பணிக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் ரமேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 21 குண்டுகள் முழங்க ரமேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்