சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் கொடுத்த ஆட்டோ டிரைவர்

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் கொடுத்த ஆட்டோ டிரைவர்

Update: 2023-10-20 15:32 GMT

பெருமாநல்லூர்

திருப்பூரை சேர்த்தவர் தயாநிதி (வயது 22). கோபியில் இவரது தாத்தா காளியண்ணன் இறந்துவிட்டதார். இதையடுத்து தாய் கலைவாணிைய அழைத்துக்கொண்டு நேற்று காலை 5 மணியளவில் மோட்டார்சைக்கிளில் திருப்பூர் - கோபி சாலையில் பெருமாநல்லூர் வழியாக கோபி சென்று கொண்டிருந்தார். அப்போது கைபையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை தவறவிட்டார். இது குறித்து பெருமாநல்லூர் போலீசில் தயாநிதி தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் தயாநிதி சென்ற சிறிது நேரத்தில் அதே வழியாக பெருமாநல்லூரை சேர்ந்த ஆட்ேடா டிரைவர் அபிமன்னன் ஆட்ேடாவில் சென்றார். அப்போது சாலையில் கிடந்த பையை எடுத்து திறந்து பார்த்தார். அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. அந்த பணத்தை அபிமன்னன் பெருமாநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

ஏற்கனவே பணத்தை தவறிவிட்ட தயாநிதி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து இருந்தால், போலீசார் தயாநிதியை வரவழைத்து அவரிடம் ரூ.50ஆயிரத்தை ஒப்படைத்தனர். மேலும் ஆட்டோ டிரைவரை, போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்