அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்

அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்

Update: 2022-06-21 11:00 GMT

திருப்பூர்

தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.எஸ்.ஆர்.ராஜ், சரவணக்குமார், சிராஜ்தீன், திவாகரன், சசிக்குமார், நிர்வாகி திலகராஜ் உள்பட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களின் கனவை கானல் நீராக்கும் அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை தொடர்ச்சியாக கொண்டாடுவது, மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட 50 வட்டங்கள், 10 ஊராட்சிகளையும் ஒவ்வொரு மாவட்ட அல்லது மாநகர துணை அமைப்பாளர்களுக்கு பிரித்து பணிகளை சிறப்பாக செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-----------

Tags:    

மேலும் செய்திகள்