பராமரிப்பின்றி காணப்படும் தாராசுரம் பஸ் நிறுத்தம்

தாராசுரம் பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே போதிய வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் வலி்யுறுத்தினர்.

Update: 2023-10-09 21:12 GMT

கும்பகோணம்;

தாராசுரம் பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே போதிய வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் வலி்யுறுத்தினர்.

பஸ்நிறுத்தம்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் கும்பகோணம் தஞ்சை மெயின் சாலையில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. கடந்த 2004- ம் ஆண்டு மகாமக விழாவின்போது தாராசுரம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக நிழற்குடைகள் ஏற்படுத்தப்பட்டு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் கும்பகோணம் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பஸ் பயணிகள், பொதுமக்கள் காத்திருந்து பஸ்சில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.

பராமரிப்பின்றி பஸ்நிறுத்தம்

கடந்த 19 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த பஸ் நிறுத்தம் தற்போது எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து வருகிறது. இங்கு பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதியோ, மின்விளக்கு வசதியோ, கழிவறை வசதியோ இல்லாமல் பொதுமக்கள், பஸ் பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இருக்கை வசதி இ்ல்லாததால் பொதுமக்கள் பஸ்சில் ஏறி செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி காணப்படும் தாராசுரம் பஸ்நிறுத்தத்தை உடனடியாக புனரமைத்து போதிய அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்