தஞ்சை விஸ்வநாத சுவாமி கோவிலில் 10.8 லட்சம் ருத்ராட்சம் கொண்டு சிறப்பு அலங்காரம்
விஸ்வநாத சுவாமிக்கு 10 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசிமக பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சூரிய வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, சுவாமிக்கு 108 கைலாய வாத்திய இசையோடு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் இன்றைய தினம் விஸ்வநாத சுவாமிக்கு 10 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.