தண்டலச்சேரி கல்லூரியின் கண்ணாடிகள் உடைந்து சேதம்

தண்டலச்சேரி கல்லூரியின் கண்ணாடிகள் உடைந்து சேதம்

Update: 2023-08-25 18:45 GMT

கஜா புயலின் போது தண்டலச்சேரி கல்லூரியின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு கலைக்கல்லூரி

திருத்துறைப்பூண்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. ஆனால் அரசு கலைக்கல்லூரி இல்லாமல் இருந்ததால் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் திருத்துறைப்பூண்டியில் அரசு கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரியில் அரசு கலைக்கல்லூரி கட்டப்பட்டது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கண்ணாடிகள் உடைந்து சேதம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜாபுயலின் போது கல்லூரியின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. கஜா புயல் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை இ்ந்த கண்ணாடிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் உடைந்த கண்ணாடிகள் மாணவ-மாணவிகள் மீது விழும் வாய்ப்பு உள்ளது.

சீரமைத்து தர வேண்டும்

இந்த கண்ணாடிகள் உடைந்து விழுந்தால் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் உள்ளது. மேலும் கல்லூரியில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் அதனை ஏற்படுத்தி தர வேண்டும். விபத்து ஏற்படும் முன்பு கஜாபுயலின் போது கல்லூரியின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த பகுதியை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்