மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலியானார்
மதுரை மாவட்டம் அன்சாரிநகரை சேர்ந்தவர் முகமதுகவுஸ் (வயது37). நத்தம் தாலுகா சேத்தூர் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இவர், கடையின் முன்பு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முகமதுகவுசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----