ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் - போலீசார் கண்காணிப்பு
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நூற்றுக்கணக்கானோர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.;
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நூற்றுக்கணக்கானோர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோவிலின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட கோவிலின் மேல்புற தட்டு ஓடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உலா வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் செல்போன் மூலம் கருவறை கோபுரங்களை புகைப்படம் எடுப்பதும் அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்க வேண்டிய காவல்துறையும் கோவில் நிர்வாகமும் ஆள் பற்றாக்குறை காரணமாக கண்டு கொள்ளாமல் இருப்பதாக ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.