தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக கே.என்.எல். சுப்பையா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2023-02-24 18:45 GMT

தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக தென்காசி நகர்மன்ற துணைத் தலைவரும், தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான கே.என்.எல். சுப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் பதவி பொறுப்பேற்றார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் காலசாமி, சங்கரநாராயணன், வேல்முருகன், சண்முக வடிவு ஆகியோர் மாவட்ட அறங்காவலர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி., நகரச் செயலாளரும் தென்காசி நகர் மன்ற தலைவருமான சாதிர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்