நெல்லையில் பிரபல ஓட்டலுக்கு தற்காலிக தடை

நெல்லையில் உணவு பொருட்கள் விற்பனை செய்ய பிரபல ஓட்டலுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-08-14 19:45 GMT

நெல்லை புதியபஸ்நிலையம் அருகே பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு சாப்பிட்ட ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிறுவன துறைக்கு புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா உத்தரவின் பேரில் மேலப்பாளையம் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் நேற்று காலையில் அந்த ஓட்டலில் ஆய்வு செய்தார்.

அப்போது அந்த ஓட்டலில் சமையல் அறை சுகாதாரமற்ற முறையில் இருந்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டலுக்கான உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். மேலும் மறுஉத்தரவு வரும்வரை ஓட்டலில் உணவு பொருட்கள் எதுவும் விற்பனை செய்யக்கூடாது. அதுவரை ஓட்டலில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்