கல்லூரி பஸ் மீது டெம்போ மோதல்
களியக்காவிளை அருகே கல்லூரி பஸ் மீது டெம்போ மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே கல்லூரி பஸ் மீது டெம்போ மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரி பஸ் நேற்று காலையில் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் வந்த போது விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து மீன் ஏற்றி வந்த ஒரு டெம்போ தாறுமாறாக ஓடி பஸ்சின் பின்னால் மோதியது. இதில் டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். மேலும் கல்லூரி வாகனம் சேதமடைந்து 4 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த டெம்போ டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.