வள்ளியூர் தெற்கு:
வள்ளியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அதிசய விநாயகர் மற்றும் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலின் 12-வது ஆண்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாக்காப்பு அலங்காரம், தீபாராதனை, கணபதி ஹோமம், துர்கா ஹோமம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் திருவிளக்கு பூஜை, சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடந்தது.