காளியம்மன் கோவில் திருவிழா

மெலட்டூர் அடிச்சேரிதெரு காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-07-01 20:37 GMT

மெலட்டூர்;

பாபநாசம் தாலுகா, மெலட்டூர் அடிச்சேரிதெரு காளியம்மன்கோவில் திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா செல்கிறார்.இன்று( ஞாயிற்றுக்கிழமை) காலை கிராம மக்கள் சார்பில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் மதியம் கஞ்சி வார்த்தலும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அடிச்சேரிதெரு கிராம மக்கள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்