வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குநடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். .விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.