கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம்

சோளிங்கரில் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-08-10 18:16 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கோலத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து கோவில் திருவிழா அமைதியாக நடத்துவது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் அனைத்து சமுதாயத்தினர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் அனைத்து பொதுமக்களும் ஒற்றுமையோடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடாத வகையில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையர், துணை தாசில்தார், நகர மன்ற தலைவர், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்