திருக்கல்யாணம்- 12 ரிஷபாரூட சேவை உற்சவம்

திருநாங்கூரில் திருக்கல்யாணம் மற்றும் 12 ரிஷபாரூட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-31 13:09 GMT

திருவெண்காடு:-

திருநாங்கூரில் திருக்கல்யாணம் மற்றும் 12 ரிஷபாரூட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் அஞ்சனாக அம்மன் சமேத மதங்கீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 12 சிவபெருமான்-அம்பிகை திருக்கல்யாணம் மற்றும் மதங்க மகரிஷிக்கு 12 ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கும் 12 ரிஷபாரூட சேவை உற்சவம் நடந்தது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி, திருநாங்கூர், மங்கைமடம், காத்திருப்பு, பெருந்தோட்டம், அன்னப்பன்பேட்டை, நயணிபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த 12 சிவபெருமான் மற்றும் அம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது.

வீதி உலா

இதையடுத்து ஒரே சமயத்தில் 12 சிவபெருமான் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் வீதி உலா காட்சிகள் நடைபெற்றன. இதில் விழாக்குழு தலைவர் குணசேகரன், செயலாளர் ஜெயபாலன், கோவில் நிர்வாக அதிகாரிகள் முருகன், குணசேகரன், கிராம பொது நல சங்க தலைவர் அன்பு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இலங்கேஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்